எம்மைப் பற்றி.

1985 இல் பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகளின் வகைப்படுத்தலின் கீழ் மாவட்ட மட்ட வங்கிகள் நிறுவப்பட்ட போதே பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஆரம்பத்தினை காணக்கூடியதாயிருந்தது. பின்பு 1997 இல் அத்தகைய பதினேழு பிராந்திய கிராமியஅபிவிருத்தி வங்கிகள் கூட்டிணைக்கப்பட்டு ஆறு மாகாண மட்ட வங்கிகளாக தாபிக்கப்பட்டன. அவை ரஜரட்ட, உருகுணை, வயம்ப, ஊவா, கந்துரட்ட மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி வங்கிகளாக செயற்பட்டன. 2010 மே மாதத்தில் இவ் ஆறு வங்கிகளும் தேசிய மட்ட வங்கியொன்றாக ஒருங்கிணைக்கபட்டு ‘பிராதேசிய சங்வர்தன வங்கி’யாக (பிரதேச அபிவிருத்தி வங்கி / RDB) நிறுவப்பட்டது.

இவ் வங்கி, 2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிகள் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. 100% அரசுக்கு சொந்தமான இவ் வங்கியானது கிராமிய மக்களால் பெற்றுக்கொள்ளக்கூடியதும் தாங்கிக்கொள்ளக்கூடியதுமான நிதிசார் கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெயார்பூட் வங்கிசார் எண்ணக்கருவை (Barefoot banking Banking concept) அடிப்படையாகக்கொண்டு வருமான படிநிலையில் மத்திய நிலை மற்றும் கீழ்ப்பகுதியிலுள்ள மக்களுக்கு புத்தாக்கத்துடன் கூடிய எளிமையான நிதிசார் சேவைகளை வழங்குவதில் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.

இவ் வங்கியானது நுண், சிறிய மற்றும் மத்திய பரிமாண கைத்தொழில்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள், பெண்கள் அதேபோன்று விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடித் துறைகளில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோரை ஊக்குவிப்பதில் ஆர்வங்கொண்டுள்ளது. மேலும் கிராமிய மக்களிடையே சேமிப்புப் பழக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சேமிப்பு மற்றும் நிலையான வைப்பிற்கு அதியுயர் வட்டி வீதங்களை வழங்குவது மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறார்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான செயன்முறைகளையும் மேற்கொண்டுள்ளது.

இதனால், இன்று 6 மில்லியனிலும் அதிக வாடிக்கையாளர்களையும், 272 சேவை நிலையங்களையும், 3000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டதொரு வங்கியாக செயற்படுவதில் பெருமையடைகிறது.

“சமூக பொருளாதார சௌபாக்கியத்தின் துரித முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் நாட்டின்  ழில்முயற்சியாளா;களை ஊக்குவித்தல்”

“சேவை அh;ப்பணிப்பு மிகுந்த தொழில்சாh; வல்லுனா; குழாமின் மூலம் பிரதேச சமூக பொருளாதார சௌபாக்கியத்திற்காக  ற்பத்தி திறனை உயா;த்திட நிதிச்சேவைகளையூம் ஆலோசனைகளையூம் வழங்குதல்”

  • இலங்கையர் அனைவரையும் பலப்படுத்துவதே எமது முயற்சி.
  • நேர்மையான, நம்பகரமான மற்றும் பகிரங்கமான மக்கள் சேவையை வழங்குவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
  • அதிசிறந்ததொரு சேவையை வழங்க நாம் என்றும் தயாராகவுள்ளோம்.
  • மக்களுக்கு இதயபூர்வமான சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
  • நாம் நாட்டின் செழிப்பிற்காக ஒரு குடும்பமாக ஒன்றுபட வேண்டும்.
  • உயர்தரம் வாய்ந்த பொறுப்புமிகு சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
  • புத்தாக்கமிகு, உயிர்ப்புடனான மற்றும் வினைத்திறன்மிகு சேவைகளை வழங்க எமை அர்ப்பணித்துள்ளோம்.
  • எம் நிறுவனத்தின் அபிவிருத்திக்காக திறமைமிகு நேரான அணுகுமுறைகளை கையாளுகின்றோம்.