RDB வெற்றி (விக்டரி)

பணம் மீளப்பெறப்படும் சந்தர்ப்பங்களிலும் உயர் வட்டி வீதத்தினை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட சேமிப்புக்கணக்கு இதுவாகும். இக் கணக்கினூடாக 70% போனஸ் வட்டியானது சிறப்பு சலுகையாக வழங்கப்படுகிறது. மேலும், கணக்குடமையாளரினால் பேணப்படும் கணக்கு மீதியை போல் பத்து மடங்கு பெறுமதிமிக்கதொரு கடனினை பெற்றுக்கொள்வதற்கான சிறப்புக் கடன் திட்டத்தினை கொண்டிருத்தல் இச் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சமாகும். பணம் வைப்பிலிருக்கும் தினங்களுக்கும் கூட போனஸ் வழங்கப்படுவது மேலும் சிறப்பாகும். மேலும், அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் குறுந்தகவல் மூலமாக அறியத்தரப்படும்.

ஓர் நாட்டுப் பிரஜையின் சேமிப்பு அந்நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் அவசியமாகும். எனவே “RDB வெற்றி” கணக்கினை, மக்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை தூண்டக்கூடிய, வைப்புகளை கவரக்கூடிய சேமிப்புத்திட்டமென அறிமுகப்படுத்த இயலும்.