RDB – தொரின் தொர (வீட்டுக்கு வீடு)
நாளாந்த சேகரிப்பு முறைமை
பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான சாதனம் /.சேவையாகக் கருதப்படும், நாளாந்த சேகரிப்பு முறைமையே “வீட்டுக்கு வீடு” என அறியப்படுகின்றது. குறித்த கிளையுடன் தொடர்புபட்ட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் இல்லங்களுக்கு தினமும் சமூகமளிக்கக்கூடிய, அர்ப்பணிப்புமிகு முகவரினூடாக இம் முறைமை செயற்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தமது வங்கிசார் கொடுக்கல் வாங்கல்களை வீட்டிலிருந்த வண்ணமே இலகுவாகவும், வசதியாகவும் மேற்கொள்வதற்கும் அமையச்செலவினை மட்டுப்படுத்திக்கொள்வதற்கும் எளிதான வழிமுறையாக இது அமையும். இல்லையெனில் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வங்கிக் கிளைகளுக்கு சமூகமளிப்பதனூடாக அவர்களது பெறுமதிமிக்க நேரத்தை வீண்விரயமாக்க நேரிடும்.
வீட்டுக்கு வீடு, சாதனம்/ சேவை வைப்புகளை சேகரிப்பதற்காக மட்டுமேயான வழிமுறையல்ல. அபிவிருத்தி நோக்கத்திற்கான கடன்கள், கடன் கணக்குகள் மற்றும் தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் வட்டியினை சரியான நேரத்தில் மீளச் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கின்றது. அதிக கஷ்டங்களுக்கு முகங்கொடுக்காமல் ஆரோக்கியமான விதத்தில் தமது வங்கிக் கணக்குகளை பராமரிக்கவும் சிற்றளவு முயற்சியாளர்களுக்கு உதவவும் இதுவொரு சிறப்பான சேவையாக திகழ்கிறது. இதனால் இலங்கையரை ஊக்குவித்தல் எனும் வங்கியின் தூரநோக்கினை அடைந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.