RDB வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக திரு.ஏ.எச்.எம். எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் தனது பணிகளை தொடங்கினார்.

272 கிளை வலையமைப்புடன் நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியாக விளங்கும்
பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக
திரு.ஏ.எச்.எம்.எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் 01.02.2022 ஆம் திகதி காலை சுபவேளையில் தமது
கடமைகளை ஆரம்பித்தார்.
வங்கித்துறையில் 35 வருட அனுபவம் உள்ள திரு. திரு.ஏ.எச். எம். எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் 1986
ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் வியாபார நிர்வாகத்திற்கான விஷேட இளமானி
பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் வங்கி
முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா வயம்ப பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுமானி
பட்டத்தையூம், NIBM நிறுவனத்தில் பிரதேச அபிவிருத்தியியல் முகாமைத்துவம் பற்றிய முதுமானி
பட்டங்களையூம் பெற்றுள்ளார். அவர் பட்டப்படிப்பின் பின்னர் 1987 ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி
வங்கியுடன் இணைந்து கொண்டார் என்பதுடன் கிளை முகாமையாளர், வலய முகாமையாளர், மாவட்ட
முகாமையாளர், பிரதான முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பிராந்திய பொது
முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவ்வேளையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, இலங்கை மத்திய
வங்கியின் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.எஸ்.கே.தர்மவர்தன, முன்னைய
பதில் பொது முகாமையாளர் தமித்தா கே. இரத்நாயக்க, தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட
ஊழியர்கள் பலரும் பங்குபற்றினர்.