வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறந்து வைக்கப்பட்டது,,,,,
நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீன மயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல, கிளை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய அவர்களினால் 2021 நவம்பர் 08 ஆம் திகதி சுபவேளையான முற்பகல் 9.30 மணிக்கு 219, கொழும்பு வீதி, ஹல்தும்முல்ல எனும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் ஹல்தும்முல்ல உதவி பிரதேச செயலாளர் திருமதி.டபிள்யு.ரி.கங்கானி சோமவீர, ஹல்தும்முல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட விருந்தினர்கள் பலருடன் ஊவா பிராந்திய பொது முகாமையாளர் சுமணதாஸ விக்ரமசிங்க, உதவி பொது முகாமையாளர் உபதிஸ்ஸ பண்டார, பதுளை மாவட்ட முகாமையாளர் பீ.பி.ஆர்.குமார உட்பட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொண்டனர்.