RDB தங்காலை புதிய கிளை வளாகத்திற்கும் மாவட்ட அலுவலக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது

நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக தங்காலை புதிய கிளை வளாக கட்டிடம் மற்றும் மாவட்ட அலுவலக கட்டிடத்திற்கு, இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ அவர்களின் கரங்களினால், 2021 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி சுபவேளையான முற்பகல் 10.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் இராஜபக்ஷ, கௌரவ சமூர்த்தி, மனை பொருளியல், நுண்நிதி, சுயதொழில்,வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, கௌரவ விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல விருந்தினர்களுடன் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.மஹிந்த சாலிய , பொது முகாமையாளர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி.தமித்தா குமாரி இரத்நாயக்க அவர்களுடன் கூட்டாண்மை முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் பலரும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொண்டனர்.