RDB லீசிங்

நுண் தொழில் முயற்சிகள், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகள், தொழில் வல்லுனா்கள், நிகர உயா்பெறுமதிமிக்க தனிநபா்கள், தனியாா் துறை மற்றும் அரசாங்க ஊழியா்கள் போன்றவா்களுக்கு அவா்களது தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு RDB லீசிங் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு உரிமையான நாட்டிலுள்ள மிகப்பெரிய அபிவிருத்தி வங்கி எனும் ரீதியில் , சிறிய  மற்றும்  நடுத்தரளவு தொழில் முயற்சிகளை  (SME) மேம்படுத்துவதற்காக லொறி,  குளிா்சாதன வசதிள்ள வண்டிகள்,(Freezer Trucks)  கனரக வண்டிகள்  (Trucks )  கெப் வண்டிகள் (Cab)   பஸ் வண்டி (Buses.)   வேன்கள்(vans)  போன்றே   off road vehicles  மற்றும் உழவு இயந்திரஙகள் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி குத்தகை வசதிகளை RDBவங்கி வழங்குகின்றது.
விஷேட குணாம்சங்கள்
  • அரச வங்கிக்குரிய நம்பிக்கை
  • குறைந்த ஆவணங்கள்
  • நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் பிரத்தியேக தவைணக் கட்டணங்கள்
  •  07 வருடங்கள் வரையான மீளச் செலுத்தும் காலம்
  •  போட்டிமிகு மலிவான வட்டி வீதங்கள் மற்றும் குறைந்த தவணை கட்டணங்கள்
குத்தகை தொகை
  •  ரூபா 50 மில்லியன்கள் வரை
மீளச் செலுத்தும் காலம்
  •  7 வருடங்கள் வரை
அடிப்படை தகுதி வரையறைகள்
பதிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாக / பதிவு செய்யப்பட்ட தொழில் நடாத்தும் நபராக/ நிரந்தர வருமானம் உள்ளவராக /  நிகரஉயா் பெறுமதிமிக்கவராக இருக்க வேண்டும்.
  • பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்கு ஒன்றை நடைமுறைப்பமுத்துபவராக இருக்க வேண்டும்
  • இதற்கு முன்னா் எந்தவொரு நிதி நிறுவனத்திலும்,  நிதி வசதிகைள செலுத்த தவறியவராக இருக்கக் கூடாது.
  • வாகனங்கள் / உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னா் குத்தகை கட்டணங்களை செலுத்துவதற்கு போதுமான அளவு காசுப்பாய்ச்சலை உருவாக்கும் திறன் இருக்கவேண்டும்
  • தொழில் முயற்சியின் உரிமையாளா்/ பங்காளா் /  பங்குடமையாளா் / இயக்குனா்;
    •  இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்
    • 18 முதல் 60 வயதுக்குட்பட்பவராக இருக்க வேண்டும்
  • வங்கியால் ஏற்றுக் கொள்ளத்தக்க , குறித்த தொழில் முயற்சி தொடா்பில் முன் அநுபவம் அல்லது தொழில்சாா் அறிவு இருக்க வேண்டும்
தேவையான பிணைகள்
 குத்தகை ஒப்பந்தம், வ ங்கியின் பெயரில் குத்தகை ஆதனத்தின் முதன்மை உரிமை, மற்றும் வங்கியினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணைகள்
மாதாந்த தவணைக் கட்டணம் (Monthly Rental)
  •  ரூபா 100,000/= இற்கு மாதக்கட்டணம் ரூபா 2,071/=*
 *  நிபந்தனைகளுக்கு உட்பட்டது